காமிரா கண்கள்

விஜய் ஆம்ஸ்ட்ராங்

'ஹை' போனோகிராபி!

Staff Writer

விஜய் ஆம்ஸ்ட்ராங் பெங்களூரில் சட்டம் படித்த போது விகடனில் மாணவப் பத்திரிகையாளராக இருந்தவர். பின்னர் நுழைந்த இடம் சினிமாத்துறை. ஒளிப்பதிவாளர்கள் பி.கண்ணன், சித்தார்த், துவாரகநாத் போன்றவர்களிடம் பணியாற்றியபின் புகைப்படம், மாத்தியோசி, தொட்டால் தொடரும், ஒண்டிப்புலி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்போது வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கத்தில் புத்தன் ஏசு காந்தி படத்தில் பணியாற்றுகிறார். ஒளி எனும் மொழி இவர் எழுதிய நூல். செஞ்சி அருகே தேவதானப் பட்டியைச் சார்ந்தவர். சின்னவயதில் ஓவியம், காமிக்ஸ் மீது இருந்த ஈடுபாடுதான் புகைப்படம், ஒளிப்பதிவு பக்கம் இழுத்து வந்ததாகச் சொல்கிறார். ஐபோனோகிராபி என்ற ஐபோன் போட்டோகிராபி இவருக்கு விருப்பமானது. இவர் தன் ஐபோனில் எடுத்த அழகியல் சார்ந்த நிலப்பரப்புக் காட்சிகளை இங்கே காணலாம்.

ஆகஸ்ட், 2015.